15/07/2022
நியூஸ்7 தமிழ் அக்ரி தொலைக்காட்சி மற்றும் பனங்காடு அறக்கட்டளை இணைந்து நடத்திய பனை கனவு திருவிழா 2022 ஒரு பார்வை......
ஜூன் 18 2022 பனை கனவு திருவிழாவின் முதல்நாள்.
தமிழர்களின் அடையாளமான பனை கடவுளுக்கு நன்றி செய்யும் நிகழ்வு பனைக்கு படையல்.....
திருவிழா நடைபெற்ற பூரிகுடிசைப் பகுதியில் இருந்த அனைத்து பனை வீரர்களும், அவர்கள் குடும்பத்தினர் கள் கலயத்துடனும், மற்றும் நூற்றுக்கணக்கான பனை ஆர்வலர்களும் மறத்தமிழன் கலைக்குழுவினரின் பரவசமூட்டும் பறை இசையுடன் ஊர்வலமாக சென்றனர்.
இடையிடையே பூரி குடிசை குழந்தைகளால் சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் சென்ற அனைவரும் பறையிசையில் மயங்கி பரவச நடனமாடினர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல பனைக் கடவுளுக்கு படையல் செய்ய கூட்டம் அலைமோதியது.
ஊர்வலத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பனை திரு. இரா.செல்வராமலிங்கம் மற்றும் பனை திரு. பாண்டியன் பனையேறி முன்னின்று நடத்திச் சென்றனர்.
இறுதியில் ஊர்வலம் படையல் செய்யவேண்டிய பனைக்கடவுள் அருகில் சென்று பனையிலிருந்து கிடைக்கும், உற்பத்தி செய்யப்பட்ட பனங்கள்ளு, நுங்கு, பனம்பழம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பனங்கிழங்கு அல்வா பனங்கிழங்கு அதிரசம் போன்ற பொருட்கள் கொண்டு பனை கடவுளுக்கு படையல் செய்யப்பட்டது.
படையல் செய்தபோது பலரின் பரவசமூட்டும் நடனத்தால் பனங்காடு அதிர்ந்தது.
பனை எனும் நம் முன்னோர்கள் கட்டாயம் பெருமகிழ்வு அடைந்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் விழா இனிதே தொடங்கியது.
மறத்தமிழன். கலைக்குழு.
LInk : https://www.youtube.com/watch?v=HtEHqixase4
#பனைகனவுதிருவிழா2022
வணக்கம் நண்பர்களே,நியூஸ்7 தமிழ் அக்ரி தொலைக்காட்சி மற்றும் பனங்காடு அறக்கட்டளை இணைந்து நடத்திய பனை கனவு திருவ....