26/08/2026
🏫🚇🚍🙏 *ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை! நாமக்கல் ரயில் நிலையம் வந்துசெல்ல முறையான இணைப்பு பேருந்து வசதி இன்றி தவிக்கும் மக்கள்! மாண்புமிகு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் Collector namakkal திரு. L. மதுபாலன் IAS அவர்கள் அறிவித்த 9597601077 என்ற WhatsApp எண்ணில் புகார் பதிவுசெய்தும், மாண்புமிகு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு C S Dilip TVK அவர்களிடம் கோரிக்கை வைத்தும் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை முன்னேற்றமில்லை!*
💢 தினசரி இயங்கும் சேலம் - திருச்சி - சேலம் பயணிகள் ரயில், கரூர் - சேலம் - கரூர் பயணிகள் ரயில், மயிலாடுதுறை - சேலம் - மயிலாடுதுறை ரயில், மதுரை - பெங்களூரூ - மதுரை வந்தேபாரத் ரயில், சென்னை - போடி - சென்னை ரயில் போன்றவற்றிற்கு கூட இணைப்பு பேருந்து வசதி ஏற்படுத்தாததால் நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்களும், நாமக்கல் வந்துசெல்லும் வெளியூர் பயணிகளும் பேருந்து நிலையம் - ரயில்நிலையம் இடையே பயணிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்!
🙏 *இந்நிலையில், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புதிதாக பொறுப்பேற்ற மாண்புமிகு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. L. மதுபாலன் IAS அவர்கள் அறிவித்த 9597601077 என்ற WhatsApp எண்ணிலும், மாண்புமிகு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.C.S. திலீப் MLA அவர்களிடமும் நாமக்கல் ரயில் நிலையம் வந்து செல்ல முறையான பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்த பொதுமக்கள் நாளதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்! ஏராளமான புதிய பேருந்து சேவைகள் பல நகரங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது*
🙏 தயவுசெய்து நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நாமக்கல் மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி,
🚊 சேலம் - திருச்சி - சேலம் பயணிகள் ரயில், கரூர் - சேலம் - கரூர் பயணிகள் ரயில், மயிலாடுதுறை - சேலம் - மயிலாடுதுறை ரயில், மதுரை - பெங்களூரூ - மதுரை வந்தேபாரத் ரயில், சென்னை - போடி - சென்னை ரயில் போன்ற முக்கிய ரயில்களுக்காவது ரயில்கள் வந்து செல்லும் நேரத்திற்கு ஏற்ப தனி இணைப்பு பேருந்து சேவைகளை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்களின் சார்பில் தாழ்மையுடன் வேண்டுகிறோம்!!!
#நாமக்கல்மாநகரம் #நாமக்கல் #சேந்தமங்கலம் #மோகனூர் #பரமத்திவேலூர் #இராசிபுரம் #திருச்செங்கோடு #தொட்டியம் #துறையூர்