Travel Lanka

Travel Lanka 🌴 Travel Lanka 🌴
Your insider guide to Sri Lanka ✨
What to do. Where to go. Where to stay.
(3)

Discover hidden gems, authentic escapes & unforgettable experiences across the island paradise

08/12/2025
வெளிநாடுகளில் இருந்து மலைபோல உதவிகள் வந்து குவிகின்றன. இந்தியா… கேட்கவே வேண்டாம்! தன்னுடைய சொந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட...
05/12/2025

வெளிநாடுகளில் இருந்து மலைபோல உதவிகள் வந்து குவிகின்றன.

இந்தியா… கேட்கவே வேண்டாம்! தன்னுடைய சொந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுபோல உணர்ந்து, அவ்வளவு பெரும் உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறது. ‘Operation Sagar Bandu’ இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.

பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமான உதவிகள்! அவர்களின் மீட்பு அணியினர், ஹெலிகொப்டர்கள், உதவிப்பொருட்கள்…!

மாலைதீவின் $50,000, நேபாளத்தின் $200,000, அவுஸ்திரேலியாவின் $1,000,000, UAE இல் C-17 இராணுவ விமானங்கள் சுமந்துவரும் பெருமளவு உதவிகள், அமெரிக்காவில் இருந்து நாளை 4 ஆம் திகதி வந்து இறங்கப்போகும் இரண்டு C-130 விமானங்கள், சுவிஸில் இருந்து 5 ஆம் திகதி வரபோகும் மீட்பு அணி என ஏராளமான வெளிநாட்டு உதவிகள்!

இந்த உதவிகள் அனைத்துக்கும் பின்னால் இருப்பது ‘அனுர’ எனும் ஒற்றை மனிதன்மீதான பெரும் நம்பிக்கை. அவரின் ‘ஊழல் அற்ற நிர்வாகத்தின்’ மீதான நம்பிக்கை.

“இவரை நம்பி உதவிப்பொருட்கள் அனுப்பினால், இவர் உரிய மக்களிடம் சேர்ப்பிப்பார்” என்கிற ஒரு clearance தான் இந்த உதவிகள் வந்துகுவியக் காரணம்.

வழக்கமாக தனிநபர்களுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பண உதவிகள், இம்முறை அரசாங்கத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுவதும் அனுரமீதான நம்பிக்கையே..!

மாறாக, மக்களுக்கு வரும் உதவிப்பொருட்களை தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் இருந்திருந்தால் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அதுதான் கடந்த காலத்தில் நடந்தது.

மக்களுக்கு என அனுப்பப்படும் உணவுப் பொருட்களை, மக்களுக்கு வழங்காமல் களஞ்சியங்களில் சேமித்து வைத்து ‘காலாவதி திகதியே’ காலாவதி ஆனபின்னும் வைச்சு ‘வடிவு’ பார்க்கும் நிர்வாகங்களே கடந்த காலத்தில் இருந்தன.

ஒரு நாட்டில் ‘ஊழல் இல்லாத நிர்வாகம்’ இருந்தால் உலகநாடுகள் அதை விரும்பும். சர்வதேச நன்மதிப்பு ஏற்படும். உதவிகள் குவியும். எல்லாமே சாத்தியமாகும்..!

ஜனாதிபதி அனுர அதை சாதித்துக்காட்டி வருகிறார்.

20/11/2025

Where nature speaks, we listen.

இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது...கூர்ந்து கவனித்துப் படியுங்கள்...புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் ...
14/11/2025

இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது...

கூர்ந்து கவனித்துப் படியுங்கள்...

புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று...

தவறாமல் படியுங்கள்...

GOLDEN AGE COMING SOON?

2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?

என்னென்ன தொழில்கள் இருக்காது ??

நிலைமை இப்படியே தொடரும் னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்...

1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கைப் போடு போட்டது...

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை...

வெள்ளை பேப்பர்ல பிரிண்ட் எடுத்து தான் போட்டோ பார்க்க முடியும் அது ஆனால் இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும் னு அவங்க நினைக்கவே இல்ல...

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அது தான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்...

தெருவுக்கு தெரு முளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லிக் கொண்டே போகலாம்...

குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்போ LED பல்பு தான்...

எதனால ? ஏன் இப்படி னு கேட்டால்?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence...

சிம்பிளாக சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள்...

மனித மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்...

உதாரணத்துக்கு சொல்லணும்னா..

சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வச்சிக்காமல், 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக் கொடுக்குது...கமிஷனோட... இல்லீங்களா..?

Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வச்சிக்காமல், இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...

இந்த மாதிரி Software Tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களைப் பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்லலாம்...

உங்களுக்கு ஒரு சட்டச் சிக்கல் வருது...

என்ன பண்றது னு தெரியலை...

என்ன செய்வீங்க?

ஒரு நல்ல வக்கீலாகப் பார்த்து..யோசனை கேட்பீங்க...

சிக்கலோட தீவிரத்தைப் பொறுத்தோ அவரோட பிரபலத்தைப் பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய பீஸ் வாங்குவாரு...

இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ?

உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் டைப் பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்களை Probabilities-டன் அந்தக் கம்ப்யூட்டர் கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலை ல துண்டைப் போட்டுக்கிட்டு தானே போகணும்...

வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாகச் சொல்லும்...

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத் தான் செஞ்சுகிட்டு இருக்கு...

ஒரு லாயரால் அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்ல முடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாமல் போய்டுவாங்க...

அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம் தான்...

ஆடிட்டர்கள் வேலையை Cleartax, Taxman போன்ற இணையத்தளம்...

டாக்டர்கள் வேலையை Ada app!...

ப்ரோக்கர்கள் வேலையை Magic Bricks, Quickr, 99acres, இணையத்தளம்...

கார் விற்பனையை carwale, cars24 இணையத்தளம்...

என சேவை இலவசமாக தருகின்றன...

UBER OLA வந்த. பிறகு சொந்தக்கார் தேவையில்லை...

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணி வரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்...

நெட்பிளிக்ஸ் வந்தப் பின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை...

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS App மூலம் எடுத்துக் கொள்ளலாம்...

80% மேலான சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை...

கம்ப்யூட்டரே பார்த்துக்கும்...

'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்...

2025 இல் Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்...

2023 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது...

அதோட ரிசல்ட் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...

ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்...

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இது தான்...

யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்க வேண்டிய தேவை இருக்காது...

'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும்...

பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு இடத்துக்குப் போகணும் னா...

உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...!

அடுத்த இரண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானாக ஒரு கார் வந்து நிற்கும். நீங்க போக வேண்டிய இடத்துக்கு சமர்த்தாக கொண்டுப் போய் விட்டுடும்...

கிலோமீட்டருக்கு இவ்வளோ னு நீங்க காசு கொடுத்தால் போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்...

இதனால என்னவாகும் என்றால்...

அடிக்கடி தேவைப்படாமல் பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர் னு ஒருத்தனும் இருக்கமாட்டான்...

சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்...

'Accident' ரொம்ப குறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழே போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலைப் போகும்...

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்டில் தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்...

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானம் செய்வது கூகுள் தான்...

எல்லாமே மின்சாரத்தில் தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியைக் கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்...

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்க னு நீங்க நினைச்சால்..?

உங்க நினைப்பை மாத்திக்குங்க...

இன்னைக்குப் பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வைக்கப் போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்...

குறிப்பாக சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்கபடுற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?

இல்லனா கூகுளைக் கேளுங்க...

அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு...

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்...

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்...

சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப் போய் பரவி வாழும் நிலை உருவாகும்...

வீட்டுப் பக்கத்திலேயே Green House வைச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்...

விவசாயம்..

இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்...

நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நிலைமை வந்துடும்...

இன்னும் சொல்லப் போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்...

விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு...

காற்றுல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ...

Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை Scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...

2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும்...

யாராலயும் ஏமாத்த முடியாது...

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளைச் செய்கிறது...

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க...

Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும்...

உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காற்றை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிடும்...

அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி...

டாக்டர்கள் க்ளினிக் வைக்கத் தேவையில்லாமல், Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத் தான் Hospital...

மாற்றம் ஒன்றே மாறாதது...

மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்...

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்குச் சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்...

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்தப் பத்தாண்டுகளில் நடக்கும்...

சந்திக்கத் தயாராவோம்.
எதிர்காலம் நம் கையில் இல்லை...

கடந்தக் காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா...

நான் படித்ததில் திகைத்த பதிவு

Road🏞️
10/11/2025

Road🏞️

Kala Wewa |  Sri Lanka 🇱🇰
10/11/2025

Kala Wewa | Sri Lanka 🇱🇰

🛑12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும்  நீலு மலர்கள், ஸ்ரீலங்காவின் மத்திய மலைப் பகுதிகளில் 2025- ல் பெருவளர்ச்சியுடன...
13/10/2025

🛑12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீலு மலர்கள், ஸ்ரீலங்காவின் மத்திய மலைப் பகுதிகளில் 2025- ல் பெருவளர்ச்சியுடன் பூத்துக் கொண்டிருக்கின்றன. 💜
Nelu Bloom – Strobilanthes sexennis
பூக்கும் நிகழ்வு ஸ்ரீலங்காவின் மத்திய மலைப் பகுதிகளில் காடுகளும் புல்வெளிகளும் புதுப்பிக்கும் சுழற்சி மாற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
நுவரெலியா ஹோர்டன் சமவெளி — 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய மலைகாடு. ஹோர்டன் பிளெயின்ஸ் தேசியப் பூங்கா (Horton Plains National Park) முழு சமவெளியையும் Nelu மலர்கள் ஊதா-இளஞ்சிவப்பு நிறப் போர்வையால் மூடியது போல காணும் காட்சி இயற்கையின் அமைதியையும் புதுப்பிக்கும் வலிமையையும் நினைவூட்டுகிறது.

நீலு என்றால் என்ன?
நீலு (Nelu) மலர் – 2025
செப்டம்பர் – டிசம்பர்
அறிவியல் பெயர் (Botanical Name)
Strobilanthes sexennis var. cerinthoides (Nees) Clarke
🌸 பிரிவு (Group)
1. மலர்ச்செடிகள் (Angiosperms) – I – இரட்டை விதைப்பை கொண்டவை (Dicotyledons)
🌸 குடும்பம் (Family)
Acanthaceae (அகாந்தேசியே குடும்பம்)
🌸 வகை / இனக்குழு (Genus)
Strobilanthes (ஸ்ட்ரோபிலாந்தஸ்)
🌸 வளரும் தன்மை (Habit)
புதர் வகைச் செடி (Shrub)
🌸 பிறப்பிடம் (Origin)
ஸ்ரீலங்காவுக்கே தனித்துவமானது (Endemic to Sri Lanka)
🌸 தேசிய பாதுகாப்பு நிலை (National Conservation Status)
CR – மிக ஆபத்தான நிலையில் உள்ள இனமாக (Critically Endangered)
🌸 சட்ட நிலை (Legal Status)
இது சட்டரீதியாக பாதுகாக்கப்படவில்லை (Not legally protected)
🌸 ஒத்த இனங்கள் (Similar Species)
Strobilanthes pulcherrima, Strobilanthes calycina போன்றவை தோற்றத்தில் ஒத்தவை.
🌸 மூல மொழிப் பெயர்கள் (All Vernacular Names)
• தமிழ்: நீலு / நெலு / நீலகுறிஞ்சி
• சிங்களம்: නෙලු (Nelu)
• ஆங்கிலம்: Nelu shrub / Horton Plains Strobilanthes

முக்கியத்துவம்:
மத்திய மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, நீலு மலர் புதுப்பிப்பு, வளம், மற்றும் புதிய தொடக்கம் எனும் அறிகுறியாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.
ஹோர்டன் சமவெளி ஒரு பாதுகாக்கப்பட்ட தேசியப் பூங்கா (Protected Area / National Park) ஆகும். இது விலங்குகள் பாதுகாப்புத் துறை (Department of Wildlife Conservation – DWC)மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்தப் பூங்கா ஸ்ரீலங்காவின் முக்கியமான இயற்கை அமைப்புகள், வாழ்விடங்கள் மற்றும் உயிரினப் பல்வகைமைகளைக் காக்கும் இடமாகும்.
இன்று “ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்கா” என அழைக்கப்படும் இடத்தில்,
முதல் முறை நீலக் குறிஞ்சி (Nelu) மலர்கள் பூத்ததாக 1881 - ம் ஆண்டு “Farr Bungalow” கட்டிய Thomas Farr என்பவர் பதிவு செய்தார். பின்னர் அவர் 1893 மற்றும் 1905 ஆண்டுகளிலும் இதே மலர்களின் பெருவளர்ச்சியைப் பார்த்ததாக குறிப்பிட்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சுற்று என்பதை பதிவு செய்தார்.

இந்த அரிய இனச் செடி ஸ்ரீலங்காவுக்கே தனித்துவமானது (endemic). இந்த Strobilanthes sexennis (Nelu) செடி monocarpic perennial shrub ஆகும். இவ்வகைச் செடி பூக்கும்வரை பல வருடங்கள் பசுமையாக இருக்கும். ஆனால் பூப்பது ஒருமுறைதான். செடிகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பூத்து,
பின்னர் முழுமையாக உதிர்ந்து செத்துவிடுகின்றன. அவற்றின் விதைகளிலிருந்து புதிய தலைமுறை செடிகள் மீண்டும் வளர்கின்றன.

Nelu மலர் பூத்தல் இயற்கை சமநிலைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது (pollinators, bees, butterflies, birds ஆகியவற்றை ஈர்க்கிறது). மலர்கள் பூத்து முடிந்தபின் செடிகள் உதிரும் போது, புதிய தாவர இனங்கள் வளர இடவசதி உருவாகிறது — இதனால் காட்டுப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் உயிரினப் பல்வகைமை அதிகரிக்கிறது.

அவற்றின் வேர் அமைப்பு Christisonia போன்ற அரிய புழுக்கச்செடிகளுக்கான (parasitic plants) ஆதரவாக செயல்படுகிறது. அவற்றின் விதைகள் பறவைகள், பூச்சிகள், சிறிய விலங்குகள் ஆகியவற்றிற்கு உணவாகும்.

இது இந்தியாவின் Strobilanthes kunthiana (கேரளா – நீலகுரிஞ்சி) என்ற பிரபல மலருடன் தொடர்புடைய இனக் குழுவைச் சேர்ந்தது, ஆனால் இன அடையாளம் வேறுபட்டது. இரண்டும் “12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்” என்ற இயற்கை அதிசயத்தைப் பகிர்கின்றன.
சுமார் 2013–ல மலர்ந்த Nelu மலர்கள் மீண்டும் 2025 –ல நுவரெலியா, Horton Plains National Park ,Thotupola Kanda மற்றும் வில்பத்து போன்ற ஸ்ரீலங்காவின் மத்திய மலைப் பகுதிகள், உயர்நிலப் பகுதிகளில் பூத்துக் கொண்டிருக்கின்றன.

2025ஆம் ஆண்டின் இந்தப் பெருவளர்ச்சி, ஸ்ரீலங்காவின் இயற்கைச் சூழலுக்கும் உயிர் பல்வகைமைக்கும் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் நேரில் சென்று ரசித்துப் பார்த்து வாருங்கள். இயற்கை நமக்குக் கொடுக்கும் இம்மகத்தான அதிசயத்தை மதிப்போம், பாதுகாப்போம்.

கேரள மாநிலத்தின் ஆழப்புழா (Alappuzha) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியே பொன்னாட் (Ponnad) ஆகும். இது ஆழப்புழா நகரத்த...
26/09/2025

கேரள மாநிலத்தின் ஆழப்புழா (Alappuzha) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியே பொன்னாட் (Ponnad) ஆகும். இது ஆழப்புழா நகரத்தின் மையத்தில் இருந்து சற்றே விலகி, அதன் கிராமிய அமைதி மற்றும் இயற்கை அழகை வெளிப்படுத்தும் ஒரு இடமாகும்.

பொன்னாட் நேரடியாகப் பெரிய சுற்றுலாத் தலமாக அறியப்படுவதில்லை. மாறாக, இது ஆழப்புழாவின் புகழ்பெற்ற பின்புல நீரேரிப் பகுதிகளின் (Backwaters) ஓர் அங்கமாகவும், கிராமிய வாழ்க்கையின் அழகிய காட்சிகளைக் கொண்ட இடமாகவும் விளங்குகிறது.

பொன்னாட்டில் நீங்கள் காணக்கூடிய காட்சிகளின் விரிவான விளக்கம் இதோ:

1. அமைதியான பின்புல நீரேரிகள் (The Serene Backwaters)

ஆழப்புழா "கிழக்கின் வெனிஸ்" என்று அழைக்கப்படுவதற்குக் காரணமான அதன் பின்னணிக் கால்வாய்கள் மற்றும் நீரேரிகளின் ஒரு பகுதி பொன்னாட்டைச் சுற்றியுள்ளது.

படகுப் பயணம்: பொன்னாட்டை ஒட்டியுள்ள கால்வாய்களில் சிறிய ஷிகாரா (Shikara) படகு சவாரிகள் அல்லது பாரம்பரியமான நாட்டுப் படகுகளில் (Canoeing) செல்லும்போது, அமைதியான நீரின் மீது சறுக்கிச் செல்வது போன்ற அனுபவத்தைப் பெறலாம். இந்தப் பயணத்தில், சுற்றிலும் நீர் நிரம்பிய வயல்வெளிகள், தென்னை மரங்கள் மற்றும் பச்சைப் பசேலென்ற தாவரங்கள் நிறைந்துள்ள கண்கவர் நிலப்பரப்பைக் காணலாம்.

நீர் வழித்தடங்கள்: நீர்வீட்டின் வாசலிலேயே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், உள்ளூர் மக்கள் படகுகளைத் தங்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் காட்சிகளும் இங்கு சாதாரணமாகக் காணப்படும்.

வீட்டுப் படகுகள் (Houseboats): பெரிய சுற்றுலாப் பயணிகளின் வீட்டுப் படகுகளின் பாதைக்கு வெளியே பொன்னாட் இருப்பதால், இங்கு நெரிசலற்ற, மிகவும் அமைதியான படகு அனுபவத்தைப் பெறலாம்.

2. கிராமியக் கேரளா வாழ்க்கை (Rustic Kerala Village Life)

பொன்னாட், கேரளாவின் கிராமியச் சூழலை அதன் தூய்மையான வடிவத்தில் காண சிறந்த இடமாகும்.

நெல் வயல்கள் (Paddy Fields): ஆழப்புழாவின் பெரும் பகுதியான കുട്ടനാട് (Kuttanad) போலவே, பொன்னாட்டைச் சுற்றியும் நீருக்குக் கீழ் பயிரிடப்படும் பரந்து விரிந்த பச்சை நெல் வயல்கள் அல்லது வாழைத் தோட்டங்களைக் காணலாம். இவை நிலப்பரப்பிற்குக் தனித்துவமான அழகைக் கொடுக்கின்றன.

உள்ளூர் தொழில்: கயிறு திரிக்கும் (Coir making) குடிசைத் தொழில்களை இங்குள்ள வீடுகளுக்கு அருகிலோ அல்லது சிறிய பட்டறைகளிலோ காண வாய்ப்புள்ளது. இது கேரளாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றாகும்.

தென்னந்தோப்புகள்: நீரேரிகளின் ஓரங்களில் வரிசையாக நிற்கும் உயர்ந்த தென்னை மரங்கள் மற்றும் அவற்றின் கீற்றுகளுக்கு இடையில் தெரியும் மண் சாலைகள் ஆகியவை மனதைக் கவரும் கிராமியக் காட்சிகளாகும்.

3. கலாச்சார மற்றும் ஆன்மீக இடங்கள்

பொன்னாட் கிராமத்தை ஒட்டி சிறிய உள்ளூர் கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் அமைந்திருக்க வாய்ப்புள்ளது.

பாரம்பரியக் கட்டிடக்கலை: உள்ளூர் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றில் கேரளாவின் பாரம்பரியக் கட்டிடக்கலையான சாய்வான கூரைகள், மர வேலைப்பாடுகள் போன்றவற்றைக் காணலாம். இவை இப்பகுதியின் கலாச்சார அடையாளத்தைக் குறிக்கின்றன.

4. இயற்கை மற்றும் ஒளியின் அழகியல்

சூரிய உதயம்/மறைவு: பின்புல நீரேரிகள் மீது சூரியன் உதயமாகும் அல்லது மறையும் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும். நீர் பரப்பில் பிரதிபலிக்கும் சூரியனின் ஆரஞ்சு மற்றும் பொன்னிற ஒளியானது, ஒரு புகைப்படக் கலைஞருக்குச் சிறந்த விருந்தாகும்.

பறவைகள்: அமைதியான சூழல் காரணமாக, நீரேரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் மற்றும் வலசை போகும் நீர்வாழ் பறவைகளைக் (Water birds) காண முடியும்.

சுருக்கமாக, பொன்னாட் ஆழப்புழா என்பது பெரிய சுற்றுலா மையங்களின் பரபரப்பு இன்றி, கேரளாவின் பின்புல நீரேரிகளின் அமைதியான அழகையும், உள்ளூர் மக்களின் எளிமையான, உழைப்பு மிகுந்த கிராமிய வாழ்வையும் நெருக்கமாகவும், நிதானமாகவும் அனுபவிக்க விரும்பும் பயணிகளுக்கு ஒரு சிறந்த இடமாகும்.

26/09/2025

கல்முனைக் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நடவடிக்கையின் ஒரு அற்புதமான காட்சியை, ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில் இங்கே விவரிக்கிறேன்:

வானில் இருந்து எடுக்கப்பட்ட இந்தக் காட்சியில், கல்முனைக் கடலும், அதன் கரையோரமும் கண்கொள்ளாக் காட்சியாகப் பரந்து விரிந்துள்ளது. ஆழமான நீல நிறக் கடல் அலைகள், வெண் நுரை சிதறலுடன் தங்க நிறக் கரையோரத்தில் வந்து மோதுகின்றன.

மீனவர்களின் கூட்டு உழைப்பு:
முக்கியமாக, கடலின் ஒரு பகுதி முழுவதும் பரப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான கரைவலை (Shore Seine Net) இந்தக் காட்சியின் மையப்புள்ளியாக உள்ளது. படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு விரித்த வலை, இப்போது கரையோரத்தில் பல குழுக்களாகப் பிரிந்திருக்கும் மீனவர்களால் ஒன்றாக இழுக்கப்படுகிறது.

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல், மீனவர்கள் தங்கள் தோள் பலத்தை ஒன்றுதிரட்டி, ஒத்திசைவான தாளத்துடன் வலையை இழுக்கும் காட்சி, அவர்களின் கூட்டுறவு மற்றும் உழைப்பைக் காட்டுகிறது.

அவர்களின் கால்தடங்கள் மணலில் ஆழப் பதிந்து, கடுமையான உழைப்பின் அடையாளத்தைக் குறிக்கின்றன.

வலையின் ஒரு பகுதி ஏற்கனவே கரைக்கு நெருங்கி வர, அதற்குள் மாட்டிக்கொண்டிருக்கும் வெள்ளி நிற மீன்கள் மின்னிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ட்ரோன் பார்வையின் சிறப்பு:
ட்ரோனின் உயரமான கோணம், இந்த முழு நடவடிக்கையின் அளவையும், அழகியலையும் ஒரே சட்டகத்துக்குள் கொண்டுவருகிறது. வலையின் வளைவு, இழுக்கும் மீனவர்களின் அணிவகுப்பு மற்றும் ஆழ்கடலின் அமைதி ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, ஒரு கலைப்படைப்பு போலத் தெரிகிறது. பாரம்பரிய மீன்பிடி முறையின் இந்த மகத்தான காட்சியை, வேறெந்த கோணத்திலும் இவ்வளவு அழகாகப் பார்க்க முடியாது.

இந்தக் காட்சி வெறும் மீன்பிடிப்பது மட்டுமல்ல; அது கல்முனை மக்களின் பாரம்பரியத்தையும், கடல் சார்ந்த வாழ்வாதாரத்தையும், அவர்களின் அசைக்க முடியாத கூட்டு உழைப்பையும் விவரிக்கும் ஒரு சிறந்த ஆவணமாகும்.

 #கொட்டகங்கா_எல்ல (Kottaganga Ella)கொட்டகங்கா எல்ல என்பது கண்டி மாவட்டத்தில் உள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கும்...
26/09/2025

#கொட்டகங்கா_எல்ல (Kottaganga Ella)

கொட்டகங்கா எல்ல என்பது கண்டி மாவட்டத்தில் உள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கும் ஒரு நீர்வீழ்ச்சிக் கொத்து ஆகும்.

இது 7 முக்கிய பிரிவுகளைக் கொண்டதுடன், மொத்தம் 100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டுள்ளது.

நீங்கள் ரங்கலா நகரத்திலிருந்தோ அல்லது தங்கப்புவ கிராமத்திலிருந்தோ மலையேற்றத்தைத் தொடங்கலாம்.

மலை ஏறுவதற்கு சுமார் 5 மணி நேரம் ஆகும்.

இந்த அற்புதமான மற்றும் அழகான நீர்வீழ்ச்சி, 7 படிகளில் இருந்து கீழே விழுகிறது.

நீர்வீழ்ச்சியின் மேல் மற்றும் கீழ் பகுதிக்குச் சென்று அதன் அழகை ரசிக்கலாம்.

ஆழமான குளங்கள் இங்கு இல்லை. ஒரு சிறிய குளம் மட்டுமே குளிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும், நீங்கள் 7வது நீர்வீழ்ச்சியிலும் குளிக்கலாம்.

இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வதன் மூலம் சிறந்த, அற்புதமான அனுபவத்தைப் பெற முடியும்.

Location
Dropped pin
Near Thangappuwa
https://goo.gl/maps/DyVhtR7LQbYWNVkt5

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வெளிநாட்டுக் கலைப்படைப்புகளைப் பார்த்துப் பிரமிக்கும் நாம், நம் நாட்டில் இயற்கையாக, இலவசமாகக் காணப்படும் இத்தகைய இயற்கைப் புதுமைகளைப் பார்த்து இன்புற, உடனே விரையுங்கள்!

நம் நாட்டின் பெருமைகளை உலகறியச் செய்வோமா? 👇🏻

இதுபோன்ற மேலும் பல அறிமுகமில்லாத பயண இடங்கள் (Hide Travel Places) தொடர்பான தகவல்களைப் பெற, எமது Travel Lanka எனும் பக்கத்தை Like செய்யுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் எமது பக்கத்தை Share செய்து அறிமுகப்படுத்தி, எங்களின் இந்த முயற்சிக்கு மேலும் ஆதரவு அளியுங்கள்.

பல வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் எந்தவித இலாப நோக்கமுமின்றி நாம் தொகுத்து வழங்கும் இப்பதிவுகளை தயவுசெய்து Copy/Paste செய்து பதிவிடாமல், உடனே Share Button-ஐ Click செய்யுங்கள்!

உங்கள் நண்பர்களுக்கும் எமது பக்கத்தை Share செய்து அறிமுகப்படுத்தி, எங்களின் இந்த முயற்சிக்கு மேலும் ஆதரவு அளியுங்கள்.

Instagram: https://www.instagram.com/p/B4_heUIBWRb/?igshid=dacc1q6rx7t0

Youtube: https://www.youtube.com/channel/UCBostmdpn83RSj6mEeHiQNg

H A T T O N  😍
26/09/2025

H A T T O N 😍

26/09/2025

Galle Face this morning, washed in heavy rain 🌧️ The sea blending with the sky, streets glistening, and the city waking up fresh and calm after the downpour.

Address

Ampara
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Lanka:

Share

Category